25 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து இளம் வீரர் அபாரம்


இங்கிலாந்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வில் ஜாக்ஸ் என்பவர் 25 பந்துகளில் சதம் அடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.  

 

துபாயில் நிகழ்ந்து வருகின்ற டி10 போட்டி தொடரில்  சர்ரே அணியும் லன்காஷைர் அணியும் மோதிய போட்டியில் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.

 

முதலில் மட்டைபிடித்து ஆடிய சர்ரே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வில் ஜாக்ஸ் இந்த அபார பெருமையை பெற்றுள்ளார்.  

 

4 ஓவர் முடிந்தபோது 16 பந்துகளில் 62 ரன்களை குவித்திருந்த வில் ஜாக்ஸ் 25 பந்துகளில் சதமடித்தார்.

 

10 ஓவரில் 177 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லன்காஷைர் அணி வெறும் 81 ரன்களில் சுருண்டது.

 

Add new comment

3 + 5 =