2019ம் ஆண்டை புனிதத்தின் ஆண்டாக ஸ்டாவ்பெர்ரி ஆயர் மார்க் டாவிஸ் அர்ப்பணித்திருக்கிறார்.


திருவருகைக்காலம முதலாவது வாரத்தில் எல்லா பங்குகளுக்கும் அனுப்பப்பட்ட மேய்ப்புப்பணி கடிதத்தில் அதனை அவர் தெரிவித்திருக்கிறார்.

 

புனிதம் அடைய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் வலியுறுத்தியுள்ளதை அதில் ஆயர் சுட்டி காட்டியுள்ளார்.

 

வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும், ஒவ்வொருவரும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், அன்பில் நிறைவாழ்விற்கும் அழைக்கப்பட்டுள்ளோம். புனிதரை போல மாறுவதை இது குறிக்கிறது என்று ஆயர் டாவிஸ் கூறியு்ளளார்.

 

புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு ஒளிமயமான வாழ்வுக்கு அழைப்பதே கிறிஸ்து பிறப்பு விழா என்றும் அவர் தெரிவித்திருககிறார்.

Add new comment

11 + 7 =