Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
2018 மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பீன்ஸ் நாட்டு பெண்மணி
2018-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே மகுடம் சூடியுள்ளார்.
2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணும், 3-வது இடத்தை வெணிசுலா நாட்டைச் சேர்ந்த பெண்ணும் பெற்றனர்.
2018-ம் ஆண்டு 67-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி, தாய்லாந்தில் நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் நகரில் நடைபெற்றது.
94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
கடந்த 1992, 2005-ம் ஆண்டுக்குப் பின் தாய்லாந்து 13 ஆண்டுகளுக்குப்பின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியை தற்போது நடத்தியுள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா என்ற பெண்ணும் பங்கேற்றிருந்தார்.
நேஹெல் சுதாஸமா அரையிறுதிச்சுற்றுக்கூட முன்னேறாமல் வெளியேறினார்.
4-வது இடத்தை பியூரிட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த கியாரா ஓர்டேகாவும், 5-வது இடத்தை வியட்நாமின் ஹென் நிஹமும் பெற்றனர்.
Add new comment