17 பெண்களுக்கு புனிதர் பட்டம் வழங்க பாதை அமைத்த திருத்தந்தை


3 பெண்களுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், ஸ்பெயினின் உள்நாட்டு போரின்போது கொல்லப்பட்ட 14 அருட்சகோதரிகளை மறைச்சாட்சியர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

இதன் மூலம், இந்த 17 பேருக்கும் புனிதர் பட்டம் வழங்குகின்ற வழிமுறையை திருத்தந்தை பிரான்சிஸ் விரைவுப்படுத்தியுள்ளார்.

 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பொதுநிலையினரான ஆசீர்வதிக்கப்பட்ட மார்குரட்டோ பாய்ஸின் புதுமையை திருத்தந்தை ஏற்றுள்ளார்.

 

மேலும், ஸ்பெயினில் கொல்லப்பட்ட அருட்சகோதரி .சபெல்லா லகாபா அன்டியாவும் அவரது 13 சகாககளும் மறைச்சாட்சிகள் என்கிற ஆணையில் திருத்தந்தை கையெழுத்திட்டுள்ளார்.

 

பியர்ட்டோ ரிக்கோவில் பிறந்த மரியன்னையின் பணியாளர்கள் சபையின் அருட்சகோதரி சோலெடாட் சான்ஜுர்ஜோ சான்டோஸி அவரது வீரதீர மதிப்பீடுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும், போலந்தை சேர்ந்த அருட்சகோதரி அன்னா காவோரெகின் வீரதீர செயல்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.    

Add new comment

7 + 3 =