151 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை – உத்தர பிரதேச பாஜக அரசு முடிவு


அயோத்தியில் சரயூ நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் ராமர் சிலையை நிறுவ உத்தர பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

 

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச அரசின் இந்த முடிவு வந்துள்ளது.

 

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

 

மும்பை அருகே கடலில் மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் பிரமாண்ட சிலை இப்போது அமைக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

ராமர் சிலை அமைக்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் பெருமளவு ஈர்க்கப்படுவர் என உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add new comment

2 + 6 =