150வது ஆண்டை கொண்டாடும் “வெள்ளை அருட்தந்தையர்”


இந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் ஆப்பிரிக்காவின் ராணியான அமலோற்பவ அன்னை திருவிழாவின்போது, “வெள்ளை அருட்தந்தையரும்”, வெள்ளை அருட்சகோதரிகளும்” 150வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றனர்.

 

ஆப்பிரிக்க மறைப்பரப்பாளர்கள் சொசைட்டி என்ற துறவற சபைதான் “வெள்ளை அருட்தந்தையர்” என்றும், ஆப்பிரிக்க மரியன்னையின் மறைபரப்பு அருட்சகோதரிகளின் துறவற சபைதான் “வெள்ளை அருட்சகோதரிகள்” என்று பிரபலமாக அறியப்படுகின்றன.

 

இந்த சபைகள் கர்தினால் லாவிகிரியேவால் நிறுவப்பட்ட 150வது ஆண்டு நிறைவைதான், வரயிருக்கும் டிசம்பர் 8ம் தேதி இந்த துறவற சபைகள் கொண்டாடவுள்ளன.   

 

வெள்ளை அருட்தந்தையரையும், வெள்ளை அருட்சகோதரிகளையும் விட்டுவிட்டு ஆப்பிரிக்காவில் மறைபரப்பு பணி என்பதை நினைத்துகூட பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

 

அத்தகைய அரிய பணிகளை இந்த இரு சபைகளும் நிறைவேற்றியுள்ளன.

 

1888ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த துறவற சபை 150வது ஆண்டு கொண்டாட்டதிற்கு 3 ஆண்டுகள் தயார் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

7 + 10 =