“செபத்தின் சக்திக்கு சான்று பகர்ந்துள்ளேன்”


விடாமுயற்சியோடு இருக்கும் தன்னுடைய திறன், தனக்காக இறைவனிடம் வேண்டியோரின் செபத்தால் வந்ததாகும் என்று அருட்தந்தை டாம் உழுன்னாலில் கூறியுள்ளார்.

 

ஏமனில் 2016ம் ஆண்டு கடத்தப்பட்டு 18 மாதங்கள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்தான் அருட்தந்தை டாம் உழுன்னாலில்.

 

கடவுள் நமக்கு வழங்கியதில் தலைசிறந்தது செபம். அதன் மூலம் நாம் எல்லாவற்றையும் பெற்று கொள்ள முடியும் என்று எசிஐ பிரஸிடம் அவர் கூறியுள்ளார்.

 

கடத்தப்பட்டு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்தபோது, நான் என்னை கடவுளிடம் கையளித்து, அவர்கள் தன்னை விரைவாக விடுவிக்க வேண்டுமென இறைவனிடம் செபித்தேன். அதேவேளையில் இறைவன் தான் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ள பணியை முழுமை செய்யவும் அவருக்கு இரக்கம் காட்ட வேண்டுமென கேட்டு கொண்டதாக அருட்தந்தை டாம் உழுன்னாலில் கூறினார்.

 

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி கடத்தப்பட்ட சலேசிய மறைபரப்பாளர் அருட்தந்தை டாம் உழுன்னாலில் அப்போது உலக கவனம் பெற்றார்.

 

ஏமனின் ஏதேனிலுள்ள மி்ஷ்னரிஸ் ஆப் சேரிட்டி இல்லத்தில் நடைபெற்ற தாக்குதலின்போது, 4 அருட்சகோதரிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டபோது, டாம் உழுன்னாலில் கடத்தி செல்லப்பட்டார்.  

Add new comment

5 + 1 =