ஹெச்ஐவி சோதனை இன்றி, திருமண சான்றிதழ் இல்லை – ஜகார்த்தா


திருமண உரிமம் பெற வேண்டுமானால், திருமணம் செய்கின்ற ஜோடிகள் ஹெச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமென்ற விதிமுறையை இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

அதிகரித்து வரும் ஹெச்ஐவி தொற்றுடையோரை தடுக்கும் வகையில், 2017ம் ஆண்டு இந்த விதிமுறை உருவாக்கப்பட்டது.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த விதிமுறை கட்டாயமாகியுள்ளது.

 

ஜகார்த்தாவுக்கு தெற்கில் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள போகோர் நகரின் உள்ளூர் அதிகாரிகளால் 2016ம் ஆண்டு அறிவித்த இது போன்ற விதிமுறைக்கு பின்னர், ஜகார்த்தா நகரம் இதனை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கட்டணம் இல்லாமல் செய்யப்படும் ஹெச்ஐவி பரிசோதனை திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு மு்னனால் செய்யப்பட வேண்டும் என்று ஜகார்த்தா சுகாதார துறையின் நிர்வாக தலைவர் காஃபிஃபா அனி தெரிவித்திருக்கிறார்.

 

இந்த மணமக்களின் திருமண உரிமத்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவமனை வழங்குகின்ற இந்த சான்றிதழை இந்த ஜோடிகள் மத விவாகார அமைச்சகத்திடம் வழங்க வேண்டும்.

 

எல்லா முக்கிய சான்றிதழ்களும் இல்லாவிட்டால், திருமண உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

Add new comment

3 + 12 =