ஹனோய் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர் நியமனம்


ஹாய் ஃபெங் மறைமாவட்ட ஆயர் ஜோசப் வு வான் தியனை ஹனோய் உயர் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

 

வியட்நாம் அரசோடு முன்னாள் திருச்சபை சொத்துகள் பற்றிய சர்ச்சையில் சிக்கியுள்ள உயர் மறைமாவட்டம்தான் ஹனோய் என்பது குறிப்பிடத்த்ககது.

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் ஜோசப் வு வான் தியன் ஏற்கெனவே அங்கு பேராயராக இருககும் 80 வயது கர்தினால் பீட்டர் நகுயன் வான் நஹோனின் இடத்தை நிரப்புகிறார்.

 

கர்தினால் பீட்டர் நகுயன் வான் நஹோனின் பதவி விலகல் இப்போதுதான் திருத்தந்தை பிரான்சிஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டு்ளளது.

 

புதிதாக பொறுப்பேற்கும் பேராயர் ஜோசப் வு வான் தியனை இதுவரை ஆயராக பணியாற்றி வருகின்ற ஹாய் ஃபெங் மறைமாவட்டத்தின் பாப்பிறை நிர்வாகியாகவும் பொறுப்பேற்கவுள்ளார் என்றும் வியட்நாம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் ஜோசப் நகுயன் ச்சி லின்க் கூறியுள்ளார்.

 

புதிய பேராயர் பொறுப்பேற்பு விழா டிசம்பர் மாதம் 18ம் தேதி ஹனோய் புனித ஜோசப் பேராயலத்தில் நடைபெற இருப்பதாகவும் பேராயர் லின்க் கூறியுள்ளார்.

 

இந்த புதிய நியமனம் தனக்கு ஆச்சரியமளிக்கும் கௌரவம் என்றும், இந்த புதிய பணியை நிறைவேற்ற கடவுள் தேவையான அருள் வரங்களை அளிக்க செபிப்பதாகவும் 58 வயதான பேராயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோசப் வு வான் தியன் கூறியுள்ளார்.  

Add new comment

9 + 6 =