ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு


பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென அந்நிறுவனம் விடுத்த கோரிக்கையை தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டதால், அந்த ஆலையை மூடிவிட தமிழக அரசு ஆணையிட்டது.

 

அரசின் உத்தரவுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த ஆலையை திறக்க 3 வாரங்களுக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிசம்பர் 15ம் தேதி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

 

இந்த வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

 

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வழங்குவது, பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றிற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது.

 

ஆனால், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

 

மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது.  

Add new comment

3 + 5 =