ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை


துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தமிழக அரசின் முடிவை மீறி வேதாந்தா நிறுவனம் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவசர வழக்காக எடுக்க செய்வோம் என்று வேதந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

2 + 7 =