ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - தருண் அகர்வால் குழு அறிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயங்கலாம் என்று தருண் அகர்வால் குழுவினர் அறிக்கை வழங்கியுள்ளனர்.

 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக ஆராய்வதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுதான் தருண் அகர்வால் குழு.

 

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் பொதுமக்கள் போராடி வந்த நிலையில், மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த கொடூரத்தை தொடர்ந்து தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடியது.

 

இந்நிலையில், தருண் அகர்வால் குழு அளித்துள்ள அறிக்கை முடிவு முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வழி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

2 + 14 =