ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் - சீமான்


தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியு்ளளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மக்களால் தெரிவு செய்த மாநில அரசுக்கு உத்தரவிட பசுமை தீர்ப்பாயம் பெரிய அமைப்பா? என்று கேள்வி எழுப்பினார்.  

 

தாமிரத்துக்கு தட்டுபாடு என்றால் குஜராத்தில் ஆலையை  திறக்க வேண்டியதானே? என்றும் அவர் கூறினார்.

 

தாமிர தட்டுபாட்டை பார்த்தால், 2020-ல் தூத்துக்குடியில் ஒரு சொட்டு நீர்கூட இருக்காது என்பதை சிந்திக்காவில்லையே.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Add new comment

5 + 1 =