வேகமாக வளர்ச்சி அடையும் பத்தில் நகரங்களில் 3 தமிழ் நாடு நகரங்கள்


மிக வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பற்றி ஆய்வில் முதல் 10 இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன.

 

அதில் மூன்று நகரங்கள் தமிழ் நாட்டிலுள்ளவையாகும்.

 

பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளது.

 

2018-ம் ஆண்டு முதல் 2035 ஆண்டுக்குள் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு மிக்க நகரங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளது.

 

தொழில் வளர்ச்சி மட்டுமின்றி நகரங்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் இந்த பட்டியல் தயாராகியுள்ளது.

 

அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளின் பட்டியலில் மேலை நாடுகளே இடம்பெறுகின்றன.

 

வளர்ச்சி அடைந்த நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்திலும், டோக்கியோ இரண்டாவது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 3வது இடத்திலும், லண்டன் 4வது இடத்திலும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

இவை அனைத்தும் ஏற்கெனவே அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே முதலிடத்தில் இருக்கும் எனவும் புதிய வளர்ச்சி எதுவும் இந்த நகரங்களில் இருக்காது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. .

 

2035-ம் ஆண்டுகளுக்குள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும், வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் திருப்பூர் 6வது இடத்திலும், திருச்சி 8வது இடத்திலும், சென்னை 9வது இடத்திலும் உள்ளன.

Add new comment

5 + 5 =