வெளிநாடு அனுப்பப்படும் தென் கொரிய 5 மறைபரப்பாளர்கள்


தென் கொரியாவின் சியோல் உயர் மறைமாவட்ட 5 அருட்தந்தையர் வெளிநாடுகளுக்கு மறைபரப்பாளர்களாக அனுப்படுகின்றனர்.

 

இவர்களுடைய இறைப்பணிகளை அடையாளப்படுத்தும் படியாக கர்தினால் ஆன்டிரூ யோம் சூ-ஜூங், துணை ஆயர்கள், அருட்தந்தையரால் பிப்ரவரி 22ம் தேதி மேயோங்தொங் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

 

இந்த அருட்தந்தையர் மெக்ஸிகோ, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

 

எல்லா இடங்களுக்கும் சென்று விண்ணரசை அறிவியுங்கள் என்ற இயேசுவின் போதனையை ஏற்று இவர்கள் மறைபரப்பு செய்ய செல்கின்றனர்.

 

கடவுளின் அன்பு உண்மையாகவே தேவைப்படுகின்ற இடங்களுக்கு, அந்த கடவுளின் அன்புக்கு சாட்சியம் பகர்கின்றனவர்களாக அவர்களை அனுப்புவதாக திருப்பலியின்போது சியோல் பேராயர் மறையுரையில் தெரிவித்தார்.

Add new comment

14 + 3 =