வெனிஸ் புனித மார்க் பேராலயம் வெள்ளப்பெருக்கால் சேதம்


இந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெனிஸிலுள்ள புனித மார்க் பேராலயத்தில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருகிறது.

 

இதனால், இந்த பேராலயத்தின் உள்ளே ஆயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்த பளிங்கு மேசேக் பரப்பில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

 

ஒரே நாளில் 20 ஆண்டுகளுக்கான முதுமையை இந்த பேராலயம் அடைந்துவிட்டதாக புனித மார்க் தேவாலய தலைவர் கார்லோ அல்பர்ட்டோ டெஸ்சரின் கூறியுள்ளார்.

 

இந்த தேவாலயத்திற்கு உள்ளே 3 அடி உயர தண்ணீர் 16 மணிநேரம் தேங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

1501ம் ஆண்டு இறந்துபோன கர்தினால் கியம்பாடிஸ்டா சென்னின் பெயர் தாங்கிய சென் சிற்றாலம் முழுவதும் வெள்ளப்பெருக்கால் மூழ்கியிருந்தது.

 

பேராலயத்தின் வெண்கல   கதவுகளும், பத்திகளும் சேதமடைந்தன.

Add new comment

1 + 10 =