வெனிசுவேலாவில் அரசியல் பதட்டம் – எதிர்க்கட்சிக்கு அமெரிக்கா ஆதரவு


வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவய்டோ இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துள்ளார்.

 

குவான் குவைடோவை வேனிசுவேலாவின் தலைவராக ஏற்றுக்கொள்வதகாவும், பிற நாடுகளும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இதனால், அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ துண்டித்துள்ளார்.

 

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அரசியல் அதிகாரத்தை பறிக்க பார்ப்பதாக ரஷ்யா கண்டித்துள்ளது.

 

குவய்டோ இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதை ஆதரிப்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், மோதல் ஏற்படுவதற்கான வழிமுறை என்றும் கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

Add new comment

1 + 6 =