வீரமிக்க சீன அருட்தந்தைக்கு நினைவு வழிபாடு


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மர்மமான முறையில் இறந்துபோன நிழலுலக அருட்தந்தைக்கு நினைவு வழிபாடு நடத்தப்பட்டு்ளளது.

 

ஹாங்காங்கில் கொளலூனில் ஸவாஷானிலுள்ள புனித போனவெஞ்சர் தேவாலயத்தில் அருட்தந்தை வெய் ஹபிங்கிற்கு நடத்தப்பட்ட நினைவு வழிபாட்டை கர்தினால் ஜோசப் சென் தலைமையேற்றார்.

 

நிங்ஷியா மறைமாவட்டத்தின் 41 வயதான அருட்தந்தை வெய் ஹபிங்கின் உடல் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வட பகுதியிலுள்ள ஷான்ஸி மாகாணத்தில் தாய்யுவான் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

 

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை சொன்னாலும், காவல்துறையின் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயாராகயில்லை. இறந்த அருட்தந்தையின் மூளையின் பெரும் பகுதிக்குள் ரத்தம் வடிந்திருததே இதற்கு காரணமாகும்.

 

அருட்தந்தை வெய் தற்கொலை செய்திருப்பார் என்று நம்பவில்லை என்று தெரிவித்த கர்தினால் சென், ஒரு நாள் அவரை புனிதராக திருச்சபை அறிவிக்கும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

 

சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த திருப்பலிக்கு முன்னால், இந்த அருட்தந்தை பற்றிய 6 நிமிட காணொளி அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டது.

 

வெய் அருட்தந்தையின் வாழ்க்கை, போதனையில் ஆர்வம், இளைஞர்களை உருவாக்குதல், ஏழைப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு அவர் போதிப்பதும், பராமரிப்பதும் பற்றி இந்த காணொளி அமைந்திருந்தது.

 

எழைகளின் நண்பராய் இந்த அருட்தந்தை வாழ்ந்து விசுவாசத்திற்கு சாட்சியம் பகர்ந்துள்ளதாக கர்தினால் சென் மறையுரையில் தெரிவித்துள்ளார்

Add new comment

1 + 1 =