விவிலியக் கல்வியை முடிவுக்கு வர அஞ்சும் வியட்நாம் ஆயர்கள்


அன்றாட வாழ்க்கையில் கடவுளின் வார்த்தைக்கு சாட்சியம் பகர்வதற்கு தயாரிக்கும் வகையில், கத்தோலிக்கர்களுக்கு விவிலிய கல்வி திட்டங்களை உருவாக்க வேண்டுமென விவிலிய மாநாட்டில் பங்கேற்றுள்ளவர்கள் திருச்சபை தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

நகா ராங் நகரில், அதே பெயரிலான மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி மையத்தில் பிப்ரவரி 19 முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற தேசிய மாநாட்டில், உலக அளவிலுள்ள 150 ஆயர்கள், அருட்தந்தையர், அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்டனர்.

 

கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற தலைப்பில் 3 நாட்கள் கூட்டத்தை வியட்நாம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பாப்பிறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

 

நாட்டிலுள்ள 27 மறைமாவட்டங்களும் விவிலியத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை மேற்கொண்டு, விவிலியத்தை படிப்பதற்கான பயனுள்ள வழிகள், செபத்தோடு கடவுளின் வார்த்தையை அன்றாடம் நடைமுறையாகும் வகையில் பங்கு உறுப்பினர்களுக்கு விவிலியத்தை கற்பிக்க வேண்டும் என்று ஹனோய் உயர் மறைமாவட்ட பேராயர் ஜோசப் வு வான் தியன் தெரிவித்திருக்கிறார்.

 

உண்மையில், கட்டட வசதிகளில் அதிகமாக முதலீடு செய்கிறோம். விவிலிய கல்விக்கான பொருட்களை வெளியிடுவது அல்லது பொது நிலையினருக்கு விவிலிய பயிற்சிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்று பேராயர் தியன் கூறியுள்ளார்.   

Add new comment

2 + 3 =