விரைவில் புழக்கத்திற்கு வருகிறது ரூ.20 நாணயம்


புதிய ரூ. 20 நாணயம் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது.  

 

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 10 நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

 

பத்து வருடங்கள் கடத்த பின்னர் ரூ. 20 நாணயம் வெளியிடப்போவதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

27 மிமீ விட்டமும், அதன் விளிம்பில் 100 ரம்பப் பற்களும் கொண்டதாக இந்த ரூ. 20 நாணயம் இருக்கும்.

 

இந்த நாணயத்தின் உள்வட்டம், 75 சதவிகிதம் செம்பிலும், 20 சதவிகிதம் துத்தநாகத்திலும், 5 சதவிகிதம் நிக்கலிலும் செய்யப்பட்டிருக்கும்.

 

நாணயங்களை அதிகம் புழக்கத்திற்கு கொண்டு வந்தால் சில்லறை தட்டுப்பாடுகள் நீங்கும் என மத்திய அரசு கருதுகிறது.

 

Add new comment

5 + 12 =