வியட்நாம் கொடியை சீர்குலைத்த கத்தோலிக்கருக்கு சிறை


வியட்நாமின் தேசிய கொடியில் வெள்ளை வண்ண பெயின்ட் அடித்ததொரு கத்தோலிக்க மனித உரிமை செயற்பாட்டாளருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வீட்டு காவலில் இருந்து வருகின்ற வலைப்பூ எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான ஹூயின்க் துஸ் வி-க்கு இந்த தண்டனையை டாக் லாக் மகாணத்திலுள்ள புயன் ஹோ மக்கள் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

எட்டு வார கர்ப்பிணியாக இருக்கின்ற இந்த செயற்பாட்டாளர் இந்த தண்டணையை, குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு அனுபவிக்க தொடங்க வேண்டும் என்றும், ஆனால், வெளிநாடடுக்கு செல்ல அவர் அனுமதிக்கப்படமாட்டார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

 

அவருடைய சொந்த ஊரில் அதிகாரிகளால் ஏற்றப்பட்டிருந்த இரண்டு தேசிய கொடிகளிலுள்ள தேசிய அடையாளத்தில் வெள்ளை வண்ண பெயின்டை இவர் அடித்துவிட்டார்.

 

அதனை புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, இந்த கொடிகளை வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடித்து, இந்த நிகழ்வுக்கு எதிராக போராடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதை வியட்நாம் பெருங்குற்றமாக பார்க்கிறது.

 

வியட்நாமின் நிதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பதால், இந்த செயற்பாட்டாளர், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று அவரது வழங்கறிஞர் கூறியுள்ளார்.

Add new comment

11 + 3 =