வியட்நாம் கத்தோலிக்க ஆசிரியர்களிடம் மனிதநேயத்தை வளர்க்க கோரிக்கை


மாணவர்களை மனிதநேயத்திலும், அறநெறியிலும், நுட்பத்திறனிலும் பயிற்சி அளித்து மனிதநேயமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு கத்தோலிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வியட்நாமில் கத்தோலிக்க கல்வி பணிகளுக்கு பொறுப்பான ஆயர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

வாழ்வது பற்றிய கவலை எழந்துள்ள ஒரு சமூகத்தில், மக்கள் பலரும் பாதுகாப்பின்மையை உணர்ந்து சுயநலமிக்கவர்களாக மாறியுள்ளனர்.

 

அதிகாரமிக்கவர்களும், பணக்காரர்களும் ஏழைகளை கைவிட்டது மட்டுமல்ல, ஏழைகளின் மோசமான நிலைமையை பயன்படுத்தி செல்வம் சேர்த்து கொள்கின்றனர் என்று வியட்நாம் கத்தோலிக்க ஆயாகள் பேரவையின் கத்தோலிக்க கல்வி பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜோசப் டின்க் டுக் தாவ் கூறியுள்ளார்.

 

உயாநிலையில் இருக்கின்ற பலரும் கவலைக்குரிய எதிர்காலத்தை பார்த்து செல்வந்தர்களாக உயருகின்றனர். ஆனால், மக்கள் பலரும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தேவையானதை பெறவே போராடி வாழ்கின்றனர்.

 

கத்தோலிக்க ஆசிரியர்கள் இளம் தலைமுறையினருக்கு கல்வி அளிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு செய்து, மாண்போடு வாழும் மனித குலத்தை உருவாக்க முடியும் என்று சுயன் லோக் மறைமாவட்டத்தின் இ்ந்த ஆயர் தெரிவித்துள்ளார்.

 

கடவுளை பெற்று கொள்வது, நாட்டை நேசிப்பது, தேவையில் உழல்வோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், உறவினர் இல்லாமல் துன்பப்டும் முதியோர்  பற்றி ஆசிரியர்கள்  இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நவம்பர் 20ம் தேதி வியட்நாம் ஆசிரியர்கள் தினத்தில் வழங்கப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

1 + 3 =