வியட்நாமில் நில கையகப்படுத்துவதற்கு எதிராfக போராடும் திருச்சபை


சிறந்த நீதியான சமூகததை கட்டியமைககும் அதிக முற்சிகளில் இணைய தங்களின் பண்ணை நிலங்களில் இருந்து வெளியேற்ற பட்டுள்ள மக்களை வியட்நாமின் ஓய்வுபெற்ற ஆயர் ஒருவரும், அருட்தந்தைகளும் அழைப்புவிடுத்துள்ளனர்.

 

வியட்நாமின் தெற்கு பகுதியிலுள்ள தான் பின்க் மாவட்டத்திலுள்ள 5 ஹெக்டேர் நிலத்தில் இருந்த விவசாயிகளின் வீடுகளை ஜனவரி 4ம் தேதி நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், அதிகாரிகளும் இடித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லுகின்ற சாலைகள் மூடப்பட்ட பின்னர் ஒரு டஜன் பேர் கைது செய்யப்பட்டனர்.

 

தன்னுடைய வீட்டை இடித்து தள்ளிய புல்டவுசரின் முன்னால் நிலத்தில் படுத்து கிடத்து, இடிப்பதை தடுக்க ஒருவர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதற்கு அருகில் இருந்த மரியாள் சிலைக்கு முன்னால் உள்ளூர்வாசிகள் திரண்டு செபித்துள்ளனர். சில அருட்தந்தையர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

 

65 ஆண்டுகளாக வீடுகளை கட்டி குடியிருந்து, இந்த இடத்தில் சட்டபூர்வமற்ற முறையில் விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

தற்போது பள்ளிக்கூடங்கள் கட்டவும், பிற பொது வசதிகளை அமைத்து கொடுக்கவும் இந்த இடம் தேவைப்படுவதாக கூறி நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அங்கிருக்கும் 84 வீடுகளை இடிக்கப்போவதாக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

 

லோக் ஹொங் பங்குத்தளத்தை சேர்ந்த இந்த பாதிக்கப்பட்டோரை கோன்டும் என்கிற மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் மைக்கேல் ஹோயாங் டுக் ஒனாக்கும், இயேசு மீட்பர் துறவற சபையின் அருட்தந்தை வின்சென்ட் பாம் ருங் தான்க்-கும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

 

நீங்கள் வெறுமனே நிலத்திற்காக மட்டும் போராடவில்லை. நீதிக்கும் உண்மைக்கும் இந்த நாட்டில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று போராடுவதாக ஆயர் ஒனாக் தெரிவித்துள்ளார்.

 

இந்த மக்கள் கடவுளின் குழந்தைகளைபோல செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add new comment

8 + 8 =