விமர்சகர்கள் பெயரை கெடுக்கும் அரசுகளை கண்டிக்கும் திருத்தந்தை


கிசகிசுப்பு மூலம் விமர்சகர்களின் நற்பெயரை கெடுப்பதற்கு ஊடகங்களை பயன்படுத்துகின்ற அரசுகளை திருத்தந்தை பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

 

இப்படிப்பட்ட அவதூறு பரப்புரைகளால் குடும்ப, பங்குகள், மறைமாவட்டங்களில் உறவுகள் கெடுவதோடு, உலக அரசியலும் கெடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

ஓர் அரசு நேர்மையாக இல்லாவிட்டால், கிசுகிசுப்பு மூலம் எதிரிகள் மீது சேறுவாரி பூச சொல்வது. பெயரை கெடுப்பது எல்லாம் அரசியலில் சகஜம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

 

ஆனால், சாவாதிகார அரசு இவ்வாறு ஊடகங்களை கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் மிரட்டல் விடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அரசியலில் அதிக பொறுப்புணர்வை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டு அமைதி செய்தியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

1 + 2 =