விதவை பெண் என்று மோடி கூறியது சோனியாவையா? வலுக்கும் எதிர்ப்பு


விதவை பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியம் (பென்சன்) பற்றி பேசிய இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

 

மோடி மறைமுகமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிடடு பேசியுள்ளதாக ஏறக்குறை 7 நாட்களுக்கு பின்னர். பலரும் மோடியை கண்டித்துள்ளனர்.

 

5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து மோடி கருத்து தெரிவித்திருந்தர்ர்.

 

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது, விதவைகளுக்கு வழங்கிய ஓய்வுதிய திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டிய நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற ஒரு விதவையின் வங்கிக் கணக்கில் மட்டும் தொடர்ச்சியாக பணம் சேர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

சோனியா காந்தியை மறைமுகமாக விதவை என்று நரேந்திர மோடி குறிப்பிட்டதாக தெரிவித்து, அதிகமானோர் சமூக வலைதளங்கில் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருப்பதாக கூறியுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, எதிர்க்கட்சியை விமர்சிப்பதாக நினைத்து கொண்டு ஒட்டுமொத்த பெண்கள் சமூதாயத்தையே மோடி காயப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

 

இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ள சோனியா காந்திக்கு நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Add new comment

12 + 0 =