வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு எதிராக பிலிப்பின்ஸ் மக்கள் பேரணி


வாழ்க்கைக்கு ஏற்பட்டு்ள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு “வாழ்க்கைக்கான நடைப்பயணம்” மேற்கொள்ளும் 3வது ஆண்டாக பிலிப்பீன்ஸின் மு்ககிய நகரங்களில் நடத்தப்பட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான க்த்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.

 

வாழ்க்கையின் மாண்பை தூக்கி பிடிக்கும் ஒற்றுமையின் அடையாளமென இதனை ஏற்பாடு செய்தோர் தெரிவித்திருந்தனர்.

 

பிற பிரச்சனைகளோடு, அரசின் போதைபொருட்கள் ஒழிப்ப நடவடிக்கையில் நீதிக்கு பறம்பாக நடத்தப்பட்ட கொலைகள், தேவாலயம் மற்றும் மசூதியில் நிகழ்ந்த சமீபத்திய குண்டுவெடிப்புகள், மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவது போன்ற பிரச்சனை இந்த பேரணியின்போது எழுப்பப்பட்டன.

 

இந்த வாழ்க்கைகான நடைப்பயணம் இறப்பு கலாசாரத்ததால் பாதிக்க்ப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குமானது என்று பொது நிலையினர் பணிக்குழு மற்றும் ஆயர்கள் பேரவையின் பொது நிலையினர் பணிக்குழுவின் அறிக்கை தெரிவித்தது.

 

வாழ்க்கையை அழிக்க நினைககும் போலி கருத்தியல்கள் மற்றும் செயல்பாடுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்த மக்களிடம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Add new comment

4 + 9 =