வாக்களிக்க வலியுறுத்தப்படும் இந்தோனீஷிய கத்தோலிக்கர்கள்


புனித வார காலத்தின்போது நடைபெறுகின்ற அதிபர் மற்றும் மாகாண தேர்தல்களில் தங்களின் வாக்குரிமையை கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி கொள்ள வாக்களிக்க வேண்டுமென இந்தோனீசிய ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 

ஏப்ரல் 14 முதல் 21 வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித வார சடங்குகள் நடைபெறும் நிலையில், ஏப்ரல் 17ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற பொதுத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

 

புனித வாரத்தின்போது, பொதுவாக பல கத்தோலிக்கர்கள் புனித பயணம் மேற்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக கிழக்கு நியுசா தெங்காரா மாகணத்தின் சிமானா சாந்தா பண்டிகை பத்தாயிரம் புனித பயணிகளை ஈர்க்கிறது.

 

இந்த நாட்டுக்கு மதிநுட்ப, நல்ல மக்கள் தலைவர்களாக வேண்டியுள்ளது எனறு கூறியுள்ள ஆயர்களின் பொதுநிலையினருக்கான பணிக்குழு, நாம் வாக்களித்தால்தான் அவர்கள் தலைவர்களாக உருவாக முடியும் என்று தெரிவித்திருக்கிறது.

 

வாக்களிக்காமல் இருப்பது இந்தோனீசியாவையும், அதன் அடிப்படை கொள்கைகளையும் அழிக்க விரும்பும் வேட்பாளர்களுக்கு உதவுவதாக ஆகிவிடும் என்று ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Add new comment

1 + 10 =