வழிபாடு வாழ்க்கையோடு தொடர்புடையது – திருத்தந்தை


கடவுளின் மக்கள் தங்களின் இதயத்தை, மனதை மற்றும் செயல்களை கிறிஸ்து இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்ய உதவ உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

வழிபாட்டின் தரத்தை மேம்படுத்த வழிபாட்டு புத்தகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது போதாது. அவ்வாறு செய்வது ஏமாற்றமளிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

வாழ்க்கை உண்மையாகவே ஒரு செபமாக, கடவுளை சாந்தப்படுத்துவதாக இருக்க, மன மாற்றம் மிகவும் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

திருச்சபைக்கு உதவுவதை தொடர வேண்டுமென ஊக்கமூட்டிய திருத்தந்தை, உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பேரவை கூட்டங்கள் மூலம் இணைந்து பணியாற்றுவது பறறியும் கூறினார்.

 

கத்தோலிக்க புனிதப்பீடம் ஆயர்களுக்கு பதிலாக இங்கில்லை. திருச்சபையின் செபவழி இறையழைத்தலுக்கு பணிபுரிய ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்தார்.

Add new comment

5 + 7 =