வன்முறையை அமைதி வெற்றி கொள்ளும் – தைவான் அதிபர்


52வது உலக அமைதி நாளை அனுசரிப்பதை முன்னிட்டு தைவான் அதிபர் சாய் இங்-வென் திருத்தந்தை பிரான்சிஸூக்கு கடிதம் எழுதியு்ளளார்.

 

தனது நாட்டின் ஜனநாயகத்திற்கான அன்பு, சீனாவிடம் இருந்து ராணுவ அச்சுறுத்தல் மற்றும் பிற பிரச்சனைகளை அதிபர் சாய் இங்-வென் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த நாள் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதியிருந்த சில கருத்துக்களை உள்ளடக்கியுள்ள இந்த கடிதம், அதிபரின் இணையதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

திருத்தந்தை தனது செய்தியில் மேற்கோள் காட்டியு்ள்ள வியட்நாமின் மறைந்த கர்தினால் பிரான்சுவா சேவியர் நகுயன் வான் துவான் வாழ்ந்து காட்டியுள்ள எடுத்துக்காட்டுக்கு சாய் இங்-வென் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

1975ம் ஆண்டுகளில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, இந்த கர்தினால் சிதரவதை செய்யப்பட்டார்.

 

பின்னர் கைது செய்ய்பபட்ட அவர் 13 ஆண்டுகளாக விசாரணை இல்லாமல் சிறை தண்டனை அனுபவித்தார்.

 

விடுதலையான பின்னர், நீதி மற்றும் அமைதிக்கான பாப்பிறை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

மறைந்த புனிதரான திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் நம்பிக்கைக்கு சாட்சியம் என்று இந்த காதினாலை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

4 + 8 =