வத்திக்கான் நடத்தும் போதைப்பொருளுக்கு அடிமை பற்றிய மாநாடு


போதைப்பொருளுக்கு அடிமை பற்றிய மாநாட்டை வத்திக்கானின்  ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான பேராயம் நடத்தவு்ள்ளது.

 

“போதைப்பொருட்கள் மற்றும் அவற்றுக்கு அடிமையாதல், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு தடை” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு நவம்பர் 29 முதல் டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

 

பல தலைப்புகளில் உரைகளும், போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், சூதாட்டம், பாலின உறவு, ஆபாசப் படங்கள் மற்றும் தடுப்பும், சிகிச்சைகளும் பற்றிய கவனத்திற்குரிய அம்சங்கள் பற்றி இதில் கலந்துரையாடப்படவுள்ளது.

 

இந்த மாநாட்டை பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது, போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 2015ம் ஆண்டு பேசிய கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டன.

 

தேசிய மற்றும் சர்வதேச எல்லைகளை கடந்து செல்லும் இந்த வெட்ககேடான சந்தையால் போதைப்பொருட்கள் பரவலாகின்றன என்று திருத்தந்தை குறிப்பிட்டிருந்தார்.

Add new comment

2 + 0 =