வத்திக்கான் செய்தி அலுவலக அதிகாரிகள் திடீர் விலகல்


வத்திக்கான் செய்தி அலுவலகத்தின் அதிகாரிகள் இருவரின் பதவி விலகலை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவை சேர்ந்த பிரெக் புர்கே மற்றும் ஸ்பெயினை சேர்ந்த பலோமா கிராசியா ஒவிஜிரே இருவரும் தங்களின் வத்திக்கான் செய்தி அலுவலக இயக்குநர் மற்றும் துணை பொறுப்பாளர் பதவிகளில் இருந்து 2019 ஜனவரி முதல் நாளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வத்திக்கானின் செய்தி பரிமாற்றங்களில் புதிய காலம் தொடங்குவதால், தாங்கள் இருவரும் பதவி விலகியுள்ளதாகவும், இதனால், திருத்தந்தை பிரான்சிஸ் புதிய அணியை சுதந்திரமாக நியமிக்க முடியும் என்றும் இந்த திடீர் பதவி விலகலை விளக்கி புர்கெ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Add new comment

4 + 5 =