வத்திக்கான் செய்தி அலுவலகத்தில் புதிய நியமனங்கள்


கத்தோலிக்க தலைமைப்பீட செய்தி அலுவலகத்தின் புதிய பல்வேறு மொழி அணியோடு ஊடக தொடபுகளை கையாள்வதற்கு புதிய ஆட்களை வத்திக்கான் நியமித்து்ள்ளது.

 

முந்தைய செய்தி அலுவலக இயக்குநர் கிரெக் புர்க் மற்றும் அவரது உதவியாளர் பலோமா கிராசியா ஒவிஜிரா தீடீரென பதவி விலகியதை அடுத்து இந்த புதிய நியமனங்கள் வந்துள்ளன.

 

திருச்சயைில் நடைபெறுள்ள மோசடிகளுக்கு எதிர்வினையாற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு, அடுத்த மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் முக்கியமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உச்சி மாநாட்டை நடத்தவுள்ளார்.

 

அதற்கு சில நாட்களுக்கு முன்னால், அபுதாபிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பயணம் மேற்கொள்கிறார்.

 

இவ்வாறு அரேபிய தீபகற்பத்தில் பயணம் மேற்கொள்ளும் முதலாவது திருத்தந்தை என்ற பெருமையை திருத்த்நதை பிரான்சிஸ் பெறுவார்.

 

வத்திக்கான் செய்தி அலுவலகத்திற்கு 4 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் 2 பேர் பெண்கள்.

Add new comment

3 + 2 =