Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வட கொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் விருப்பம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அரசு ஊடகம் மூலம் ஆற்றிய புத்தாண்டு உரையில் கிம் ஜாங்-உன்னின் மறைமுக எச்சரிக்கையின் எதிரொலியாகவே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியதால், அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
அமெரிக்காவுக்கு பணிந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், வட கொரியாவிலுள்ள அணு ஆயுதங்களை அழித்துவிடும் சம்மதத்தை வெளிப்படையாக அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் டொனால்டு ட்ரம்பும், கிம் ஜாங்-உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.
வட கொரிய அணு ஆயுதங்களை அழிப்பது தொடர்பாக 4 அம்ச தீர்மானம் கையெழுத்தானது.
இதனை வட கொரியா நிறைவேற்றினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா தெரிவித்தது.
இந்த தீர்மானத்தை செயல்படுத்துவதில் இரு நாடுகளுமே சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
இந்த பின்னணியில் கிம் ஜாங்-உன் ஆற்றிய புத்தாண்டு உரையில் வட கொரியா மீது பொருளாதார தடைகள் நீடித்தால் மாற்றுப் பாதையை நோக்கி செல்ல வேண்டி வரும் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Add new comment