வட கொரியா – அமெரிக்கா தொடர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தும் சீனா


வட கொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென சீனா கூறியுள்ளது.

 

முன்னேற்றம் பெறுவோம் என்ற நம்பிக்கையை கருத்தில் கொண்டு அமெரிக்காவும் வட கொரியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்  ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக வெளியுறவுத் துறை பிரதிநிதி சாங் தெரிவித்துள்ளார்.

 

அதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைக்கு  தீர்வுக் காணப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட 2வது உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது.

 

அணு ஆயுத சோதனை மையங்களையும் மூடிவிட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பமும், வடகொரியா மீதான அமெரிக்க வர்த்தகத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்கிற டிரம்பின் விரும்பமும் நிறைவேறாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

 

ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் எதிர்காலத்தில் சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு என்பது ஒரே நாளில் சரி செய்துவிடும் பிரச்சனை அல்ல என்று கூறியுள்ள சீனா, அரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வ காண வேண்டுமென தெரிவித்திருக்கிறது.

Add new comment

13 + 1 =