வட அயர்லாந்தின் கலைக்கலைப்பு சட்டத்தில் தெரிசா மே தலையீடு இல்லை


வட அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் பிரிட்டன் தலைமையமைச்சர் தெரிசா மேவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருகலைப்பை செயல்படுத்த திருத்தம் கொண்டு வருவது வட அயாலாந்து நாடாளுமன்றத்தின் உள்விவகாரம். எனவே வெஸ்ட்மினிஸ்டனின் அதிகாரத்தை தெரிசா மே பயன்படுத்த போவதில்லை என்று பிரிட்டன் தலைமையமைச்சரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடரவல்ல எரிசக்தி ஊழல் தொடர்பாக வட அயாலாந்தின் மாகாண நாடாளுமன்றம் ஓராண்டு காலமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பிரிட்டன் நாடாளுமன்றம் நேரடியாக அதிகாரத்தை செயல்படுத்தி வந்தாலும், மாகாண நாடாளுமன்றத்தின் பணிகளில் தலையிடுவதில்லை என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால், அயர்லாந்தில் மக்களிடம் வாக்கெடுப்புடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வாக்களித்தோரில் மூன்றில் இரண்டு பங்கினர் கருக்கலைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனவே, அதனை உடனடியாக சட்டமாக்க தெரிசா மேயை பிரிட்டன் தொழிலாளர் கடசி வலியுறுத்தி வருகிறது.