வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிராக ஒன்றாக திரண்ட வங்கி ஊழியர்கள் 


விஜயா வங்கி, தேனா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடோ ஆகியவற்றை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

அனைத்திந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓய்வூதிய மறுசீரமைப்புக்கும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

 

இப்போராட்டத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி பணியாளர் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைத்துள்ளதற்கும் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

மண்டல ஊரக வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

பிரதேச ஊரக வங்கிகளை ஒன்றாக இணைப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும். இந்த இணைப்புகளால் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக எந்த விதமான பயனும் எற்படாது என்று அனைத்திந்திய வங்கி சம்மேளன பொதுச் செயலாளர் சவுமியா தத்தா கூறியுள்ளார். .

 

இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் 15 ஆயிரம் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Add new comment

4 + 6 =