வங்கதேச திருத்தலத்தில் புனிதப் பயணத்திற்கு ஊக்கமூட்டும் ஆன்மிக தலைவர்


வங்கதேசத்தில் புனித பதுவை அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கத்தோலிக்க திருத்தலத்தில் ஆன்மிக தலைவர் ஒருவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருப்பது, இந்த திருத்தல ஆண்டு பெருவிழாவின்போது அங்கு வருகின்ற புனித பயணியரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியள்ளது.

 

வங்கதேசத்தை சேர்ந்த பெரும்பாலும் கிறஸ்தவர்கள், ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவருமாக சுமார் 80 ஆயிரம் யாத்திரிகர்கள் பிப்ரவரி 1ம் தேதி காசிபூர் மாவட்டத்திலுள்ள பான்ஜோரா கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியாரிடம் செபித்து இறையருள் வேண்டுவதற்கு பெருங்கூட்டமாக வந்திருந்தனர்.

 

பக்தர்களுக்கு நிறைவேற்றிய திருப்பலிக்கு கர்தினால் பேட்ரிக் டி‘ரோசாரியோ தலைமை தாங்கினார்.

 

இந்த புனிதரின் சிலையை தொட்டு, முத்தமிட் மக்கள் நீண்ட வரிசையில் நின்று, பல மணிநேரம் காத்திருந்தனர்.

 

மெழுகுவர்த்திகள், ஆபரணங்கள், பணம், புறாக்கள் மற்றும் முயல்களை பலரும் காணிக்கையாக புனிதரின் பாதத்தில் வைத்தனர்.

 

பெருவிழா நாளுக்கு முன்னதாக இந்த திருத்தலத்தில் 9 நாட்கள் செபவழிபாடுகளும், திருப்பலிகளும் நடைபெற்றன. இதற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

 

இந்த புனித தலத்தின் விரிவாக்கம் மற்றும் சிறந்த மேலாண்மையால் பக்தர்கள் அதிக எ்ணணிக்கையில் வந்துள்ளதாக திருச்சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், பாதுகாப்பு, குறைந்த விலையில் உணவு, முதல் முறையாக ஆன்மிக தலைவரை அங்கு தங்கி பணிபுரிய செய்திருப்பதும் அதிக பக்தர்கள் இந்த திருத்தலத்திற்கு வருவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Add new comment

13 + 2 =