வங்கதேச கல்வி திட்டத்தை கைவிட கட்டாயப்படுத்தப்பட்ட காரிதாஸ்


வங்கதேசத்திலுள்ள ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் வழங்கப்பட்டு வந்த முக்கிய கல்வி திட்டத்தை கத்தோலிக்க அறக்கொடை நிறுவனமான காரித்தாஸ் நிறுத்தியுள்ளது.

 

இந்த பணித்திட்டத்தின் காலம் முடிந்த நிலையில், இதற்கான நிதியுதவியை நிறுத்த நன்கொடையாளர்கள் முடிவு செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆயிரக்கணக்கான ஏழை சிறார்களுக்கு அடிப்படை கல்வி அளிக்க ஐரோப்பிய ஒன்றியமும், காரிதாஸ் பிரான்ஸூம் ஒரு கோடி டாலர் தொகையை காரிதாஸிடம் வழங்கியது.

 

கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்பட்ட இந்த பணித்திட்டம், சென்றடய முடியாதவர்களை அடிப்படை கல்வி மூலம் சென்றடைவதை நோக்கமாக கொண்டிருந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

 

வங்கதேசம் முழுவதும் ஆயிரத்து ஐந்து பள்ளிகளை உருவாக்கிய காரித்தாஸ், பள்ளிக்கூடம் இல்லா சமூகத்திலிருந்து பள்ளிக்கு செல்லாத, கல்வியை பாதியில் விட்டுவிட்ட ஒரு லட்சத்து 58 ஆயிரத்திற்கு மேலான குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கியது.

 

ஒவ்வொன்றிலும் 30 முதல் 120 மாணவர்களை இந்த கலங்கரை விளக்க பள்ளிக்கூடங்கள் கொண்டிருந்தன.

 

இந்த பணித்திட்டத்தில் ஆயிரத்து 339 ஆசிரியர்களும், 172 ஊழியர்களும் வேலை செய்தனர்.

 

2017ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் நிறைவு பெற்ற இந்த பணித்திட்டத்தை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை விரிவாக்க காரித்தாஸ் முறையீடு செய்ததால், ஐரோப்பிய ஒன்றியம் அது வரை நீட்டித்து நிதி ஆதரவு வழங்கியது.

 

அந்த முடிவு கவலை அளிப்பதாக இருந்தாலும், மிகவும் அவசியமாக, மிக மோசமான பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்ட்ட பள்ளிகளுக்கு நிதி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக காரித்தாஸ் துணை செயலதிகாரி ரான்ஜோன் பிரான்சிஸ் ரோஸாரி கூறியுள்ளார்.

 

தொலைதூரத்திலுள்ள இதற்கு முன்னால், கலங்கரை விளக்கம் பணித்திட்டத்தால் நிதி ஆதரவு அளிக்கப்பட்ட 383 பள்ளிக்கூடங்கள் கத்தோலிக்க மறைமாவட்டங்கள், காரிதாஸ் அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் மக்களால் ஆதரவு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.  

Add new comment

5 + 2 =