வங்கதேசத்தில் ரோஹிஞ்சாக்களை சந்தித்த கர்தினால் டேக்லெ


கத்தோலிக்க திருச்சபையின் சமூகச் சேவை பணிகளின் பிரிவான சர்வதேச காரிதாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லுயிஸ் அன்றனியோ டேக்லெ வங்கதேசத்தில் அமைந்திருக்கும் ரோஹிஞ்சா அகதிகள் முகாமை சென்று பார்த்தார்.

 

துன்புறும் நிலையில், இடம்பெயர்ந்து வாழுகின்ற இந்த சிறுபான்மையினருக்கு உதவி செய்வதை சர்வதேச சமூகம் தொடர வேண்டும் எ்னறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

 

2 நாட்கள் வங்கதேசத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது, 61 வயதான மணிலா பேராயர் கர்தினால் டேக்லெ, கோக்ஸ்  பஜாரில் உதவி பணிபுரியும் காரிதாஸ் ஊழியர்கள், அரசு அதிகாரிகள் உள்பட அகதிகளின் குடும்பங்களை சந்தித்தார்.

 

வங்கதேசத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ள கோக்ஸ் பஜார் 10 லட்சத்துக்கும் மேலான அகதிகளின் வாழுகின்ற இடமாக உள்ளது.

 

இதில் பெரும்பாலோர் 2016 முதல் 2017ம் ஆண்டு மியான்மரின் ரக்கையின் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைகளின்போது தப்பி வந்தவர்களாகும்.

 

கோக்ஸ் பஜாரில் இருக்கின்ற 30 அகதிகள் முகாம்களில், மிக பெரிய குடுபாலாங் அகதிகள் முகாம்களிலுள்ள பல கும்பத்தினரிடம் கர்தினல் டேக்லெ பேசினார்.

 

காரிதாஸ் அங்கு அமைத்துள்ள உதவிப் பொருட்களின் விநியோக இடம், குழந்தைகளின் நலன்களை பாதுகாக்கும் இடங்கள், மாதிரி வீடுகள் ஆகியவற்றை கர்தினால் டேக்லெ பார்வையிட்டார்.

Add new comment

2 + 0 =