லாபம் குறைவான வழிகளில் விமானங்களை நிறுத்திவிட ஜெட் ஏர்வேஸ் முடிவு


குறைவான லாபம் கிடைக்கின்ற வழித்தடங்களில் விமானங்களை குறைத்துவிட்டு, அதிக லாபம் கிடைக்கின்ற வழித்தடங்களில் மேலதிக விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

பெரும் நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது.

 

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 1,297 கோடி ரூபாய் நஷ்டமும், அதனை தொடர்ந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டமும் ஜெட் ஏர்வேஸூக்கு ஏற்பட்டுள்ளது.

 

விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்களுக்கு இருமாத ஊதியம் வழங்கவில்லை என தெரிய வருகிறது.

 

இதனால் 7 வளைகுடா நாடுகள் வழியாக செல்லும் 40 விமான சேவைகளை ரத்து செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

டிசம்பர் 5ம் தேதி முதல் இந்த 40 விமான சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளன.

 

டெல்லி - தோஹா, மும்பை - தோஹா மற்றும் மும்பை - துபாய் ஆகிய வழித்தடங்களில் விமானங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Add new comment

4 + 9 =