லயன் ஏர் விமான விபத்து நடந்து எப்படி?


லயன் ஏர் விமானம் பறப்பதற்கே தகுதியில்லாமல் பறந்ததால்தான் கடலில் விழுந்து விபத்து நேர்ந்துள்ளது என்று இந்தோனீசிய புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

கடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியதில் 189 பேர் பலியாகினர்.

 

முன்னதாக பறந்து சென்ற விமானங்களிலும் தொழில்நுட்ப பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது.

 

ஆனால் இந்த விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான விளக்கத்தை இந்த புலனாய்வாளாகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Add new comment

10 + 4 =