ரோமில் புதைக்கப்பட்ட ஆயரின் எச்சங்களை தேடும் பிலிப்பின்ஸ் அருட்தந்தையர்


நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் இறந்து புதைக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டின் முதலாவது ஆயரின் எச்சங்களை ரோம் நகரில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தேடி வருகின்றனர்.

 

ரோமில் காம்போ வெரானோவிலுள்ள டோமினிக சபை நினைவகத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயர் ஜோர்ஜ் பார்லின் எச்சங்களை கண்டறிந்து அதனை பிலிப்பின்ஸ் நாட்டுக்கு எடுத்து செல்ல இந்த அருட்தந்தையர் விரும்புகின்றனர்.

 

கத்தோலிக்க போதனைகளை கடைபிடிப்பதில் இருந்த அச்சுறுத்தலுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் திருச்சபையில் தைரியமாகவும், உறுதியான இறைநம்பிக்கையை பாதுகாத்தும் வந்த மாமனிதருக்கு செலுத்துகிற மாபெரும் அஞ்சலியாக தங்களின் இந்த முயற்சி இருக்கும் என்று இந்த அருட்தந்தையரில் ஒருவரான எரிக்சன் ஜோஸ் கூறியுள்ளார்.

 

இந்த ஆயர் மட்டும் இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்திராவிட்டால், பிலிப்பீன்ஸில் கத்தோலிக்கர்கள் இன்று வரை சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள் என்றும், கத்தோலிக்கம் இத்தகைய உயர்வை பெற்றிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

பிலிப்பீன்ஸில் கத்தோலிக்கம் வேரூன்றிய 600வது ஆண்டை 2021ம் ஆண்டு கொண்டாடவுள்ளனர்.

 

இந்த ஆயரின் எச்சங்களை பிலிப்பின்ஸூக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேடல் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டது.

 

ஆனால் அவரது எலும்புகள் மோமினிக்கன் சபையினருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பொது கல்லறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் முயற்சி தாமதமாகி கொண்டிருக்கிறது.  

Add new comment

4 + 8 =