ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை நீக்கும் நிறுவனங்கள்


ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

 

ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், பிற வலைபின்னல் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான சலுகைகளை அறிவித்து வருகின்றன.

 

இரண்டு சிம் வசதி வந்த பினன்ர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவற்றை இரண்டாவது சிம் ஆக தான் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

தொலைபேசி அழைப்புக்காக மட்டுமே இத்தகைய வாடிக்கையாளாகள் பயன்படுத்தி வருவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதும் கிடையாது.

 

இந்த நிலையில்தான், வாடிக்கையாளாகளை நீக்கும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் 10 கோடி சந்தாதாரர்களை ஏர்டெல் நிறுவனம் நீக்க உள்ளது.

 

வோடபோன் ஐடியா நிறுவனமும் 15 கோடி சந்தாதாரர்களை நீக்க உள்ளது.

 

இவர்கள் அனைவரும் 2ம் தலைமுறை அலைகற்றை சந்தாதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

10 + 1 =