ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை – தயார் நிலையில் உத்தர பிரதேசம்


உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்க திட்டம் தயாராக உள்ளதாக அந்த மாநில தலைமைச் செயலாளர் அவானிஷ் தெரிவித்துள்ளார்.

 

அயோத்தியில் இந்து கடவுள் ராமருக்கு சிலை அமைக்க உத்தரப் பிரதேச அரசு தீவிரம் காட்டி வருவதற்கு இந்திய நடுவண் அரசும் உறுதுணையாக இருப்பதாக தெரிகிறது.

 

ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்கப்படும் எனவும், கடவுளின் உருவம் 151 மீட்டர் உயரத்திலும், மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டர் உயரத்திலும் இருக்கும் என அவானிஷ் அவாஸ்தி தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ராமரின் பீடம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமென தெரிகிறது.

 

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 31ம் தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 

இந்த சிலையின் உயரத்தைவிட அதிக உயரத்தில் சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கூறியுள்ளார்.  

 

இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி தாயிக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

ராஜஸ்தானில் உலகிலேயே பெரிய சிவன் சிலை உதய்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், வல்லபாய் படேல் சிலையை விட உயரமான மராட்டிய வீரர் சிவாஜியின் சிலையை மஹாராஷ்டிரா கட்டியமைத்து வருகிறது.

Add new comment

1 + 2 =