ராஜீவ் கொலை: 7 பேரை விடுதலை செய்ய கையெழுத்து பரப்புரை


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 போ் விடுதலை குறித்து ஆளுநா் விரைவாக முடிவெடுக்க வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கம் சார்பாக கையெழுத்து பரப்புரை நிகழ்ந்து வருகிறது.

 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு மாநில ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன் காரணமாக தமிழக அமைச்சரவை சார்பாக, அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பா் 9ம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்த விவகாரம் தொடாபாக தமிழக ஆளுநா் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.

 

இந்நிலையில் விதி எண் 161ஐ பயன்படுத்தி 7 பேரையும் ஆளுநா் விரைந்து விடுவிக்க வேண்டும் என்று கையெழுத்து பரப்புரையை அமெரிகக தமிழ் சங்கம் தொடங்கியுள்ளது.

 

இந்த கையெழுத்து கடிதங்கள் அனைத்தும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

Add new comment

5 + 14 =