ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிக பெண்கள்


இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு டிச.7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

 

விண்ணப்ப மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான வெள்ளிக்கிழமை 579 பேர் தாங்கள் சமர்பித்த மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

 

மொத்தம் 2 ஆயிரத்து 873 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இவர்களில் 189 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போதைய முதலமைச்சர் வசுந்தரா உட்பட 23 பேர் பாரதிய ஜனதா கட்சியையும், முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் உட்பட 27 பேர் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள்.

 

கடந்த 10 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண் வேட்பாளர்கள் அதிகமாக போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

18 + 0 =