ராஜபக்ச தோல்வியுற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க சிறிசேன மறுப்பு


இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றியை ஜனாதிபதி சிறிசேன ஏற்க மறுத்துள்ளார்.

 

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு 19ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபக்ச அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்தார்.

 

அந்த வாக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்ததாக ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் ராஜபக்சவுக்கு தோல்வியே கிடைத்தது.

 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்திருக்கிறார்.

 

எனவே, இலங்கை அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது.

Add new comment

1 + 1 =