ரபேல் போர் விமானங்கள் வாங்க 50 சதவீத தொகை செலுத்திய இந்தியா?


பெரும் சர்ச்சை நிலவி வந்தாலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கான 50 சதவீத பணத்தை மத்திய அரசு வழங்கிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.  

 

பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

 

2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவுக்குக் கிடைத்துவிடும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

 

ஒப்பந்தத் தொகையான 59 ஆயிரம் கோடி ரூபாயில் 34 ஆயிரம் கோடி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் மத்திய அரசு செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

 

இந்த ஆண்டுக்குள் 13 ஆயிரம் கோடி ரூபாயை மற்றொரு தவணையாக செலுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

 

இறுதித் தவணை அனைத்து விமானங்களும் ஒப்படைக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் என தெரிகிறது.  

 

இவற்றை ஹரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஹசிமாரா விமானப்படைத் தளங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனால், பாகிஸ்தாஸ் மற்றும் சீனாவின் எல்லைகளில் அத்துமீறல்களை எதிர்கொள்ளலாம் என திட்டம் உள்ளது. .

Add new comment

12 + 0 =