ரபேல் ஒப்பந்தம் – முறையின்றி தலையிட்ட மோடியின் அலுவலகம்


இந்திய பாதுகாப்பு துறைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட வரைமுறைகளை மாற்றி புதிய ஒப்பந்தம் போடப்பட்டதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தலையிட்டுள்ளது தற்போது அப்பலமாகியுள்ளது.

 

இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில் பதிப்பாசிரியர் எம்.ராம் அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது.

 

ரபேல் ஒப்பந்தம் பற்றி தேசிய பேச்சுவார்த்தை குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டு, நரேந்திர மோடியின் அலுவலகம் இன்னொரு பேச்சுவார்த்தையை நடத்தியதாக அதில் தெரிவிக்கப்படுகிறது.

 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு துறையின் நவம்பர் 25, 2015 தேதியிட்ட கடிதம் இந்த ஆங்கில நாளேட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தபோது, தனியாக பிரதமர் அலுவலகத்திலும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

பிரதமர் அலுவலகத்தின் இந்தத் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை தவிரக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செவிசாய்க்கப்படவில்லை.

 

பிரதமர் அலுவலகத்தின் தனிப்பேச்சு பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பேச்சுவார்த்தைக் குழு நடத்தும் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் ஜனநாயக நடைமுறைக்கு அப்பாற்பட்டு, சர்வாதிகார போக்கில் தலைமையமைச்சர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளது தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

 

முன்னாள் பிரான்ஸ் அதிபரே மோடியின் உத்தரவால்தான் அனில் அம்பானியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாக சொல்லியிருக்கிறார் என்ற உண்மையும் அம்பலமாகியுள்ளது.

 

எனவே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Add new comment

3 + 3 =