யூதர்களை காப்பாற்றிய 110 வயது அருட்சகோதரி மரணம்


இரக்கமும், பணிவடக்கமுடையவர் என்றுதான் போலந்து கத்தோலிக்க திருச்பையும், பிறரும் அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக்கை கூறுகின்றனர்.

 

அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க மிக பெரிய மக்கள் கூட்டம் வந்திருந்தது.

 

உலகிலேயே அதிக வயதானவர் என்று நம்பப்படும் இவர் யூத இனப்படுகொலை நேரத்தில் அதிக யூதர்களை மீட்டவராக அங்கீகரிக்கப்பட்டவர்.

 

கடந்த வாரம் 110வது வயதில் அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக் காலமாகியுள்ளார்.

 

1908ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பிறந்த அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக், 21வது வயதில் கன்னியர் சபையில் சேர்ந்தார்.

 

அவரது 30வது வயதில்தான் யூத இனப்படுகொலை நிகழ்ந்தது.

 

தற்போது லிதுவேனியாக இருக்கும் வில்னியுஸூக்கு அருகில் பதிய கன்னியர் இல்லத்தை நிறுவிய அருட்சகோதரிகளில் அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக்கும் ஒருவர்.

 

இந்த இல்லத்தில்தான் டஜனுக்கு மேற்பட்டே யூதர்களை பாதுகாத்து வைத்து அளப்பரிய சேவை புரிந்துள்ளார் அருட்சகோதரி சிசிலியா மரியா ரோசாக்.

Add new comment

1 + 0 =